Saturday 4th of May 2024 02:01:48 PM GMT

LANGUAGE - TAMIL
கோதுமை மா விலை அதிகரிப்பு என சில ஊடகங்கள் பொய்ச் செய்தி!

கோதுமை மா விலை அதிகரிப்பு என சில ஊடகங்கள் பொய்ச் செய்தி!


பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரன தொலைக்காட்சி மற்றும் நெத் எம்.எம். ஆகிய ஊடகங்கள் பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்

கோதுமை மாவின் விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் அமைச்சவையினால் நியமிக்கப்பட்ட வாழ்க்கை செலவுக் குழுவின் அனுமதியின்றி அதிகரிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோதுமை மாவின் விலை இன்று இரவு முதல் 8 ரூபாய் 50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தவறான பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் மத்தியில் விலை அதிகரிப்பு என்ற குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE